Wednesday 1 November 2017

இந்திய அணுமின் கழகம்

இந்திய அணுமின் கழகம்

இந்திய அணுமின் கழகம் (Nuclear Power Corporation of India; நியூக்ளியார் பவர் கார்பரேஷன் ஆஃப் இந்தியா) இந்தியாவில் மும்பையில் இருந்து செயல்படும் மத்திய அரசின் புகழ் பெற்ற அரசு நிறுவனங்களில் ஒன்றாகும்.[2] இந்த நிறுவனம், அணுசக்தியை போதிய பாதுகாப்புடன் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் தன்னிறைவு அடையவும், அதன் வழியாக மின்சாரம் தயாரித்து நமது நாட்டு மக்கள் மேம்பாடு அடைவதையும் குறிக்கோளாகக் கொண்டு செயல் பட்டு வருகிறது.[3]
இந்த நிறுவனம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை அமைச்சகத்தின் கீழ் அமைந்த இந்திய அணு சக்தித்துறையின் நிருவாகத்தில் செயல்பட்டு வருகிறது.[4]
இந்திய அணுமின் கழகம் 1987ஆம் ஆண்டில் இந்திய அரசு துவங்கிய பொதுத் துறை நிறுவனமாகும்.‎[5] இந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள்களை பயன்படுத்தி அணுக்கரு அணுசக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்தியாவில், நவம்பர் 27, 2010 தற்போதைய நிலவரப்படி, 20 அணுக்கரு அணுமின் ஆலைகளை ஐ எசு ஒ 14000 தரநிர்ணயத்துடன் இயக்கி வருகிறது. இவ்வாலைகள் இந்தியாவில் ஆறு இடங்களில் முறையே தாராப்பூர் (மகாராட்டிரம்), ராவட்பட்டா (ராஜஸ்தான்), நரோரா (உத்தரப் பிரதேசம்),கக்ரபார் (குஜராத்), கல்பாக்கம் (தமிழ் நாடு), கைகா (கர்நாடகா) ஆகிய இடங்களில் நிறுவப்பெற்றுள்ளன.‎[6] இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.[7]

இந்திய ந்யூக்ளியர் பவர் கோர்போரேசன் நிறுவனம் அணுக்கரு ஆலைகளை வடிவமைப்பது, கட்டுவது, செயல்படுத்தி ஆலையை பராமரிப்பது, தயாரித்த மின்சாரத்தை வணிகம் செய்வது, சுற்றுச் சூழல் பாதிப்படையாமல் பாதுகாப்பது ஆகிய அனைத்து செயல்பாடுகளையும் ஒருங்கிணைந்து பொறுப்பேற்று செயல்படுத்தி வருகிறது.

இந்திய அணு மின் கழகத்தின் விரிவாக்கத் திட்டங்கள்

இந்திய அணுமின் கழகம் தற்பொழுது 19 அணு மின் நிலையங்களை செயல்படுத்தி, 4560 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. கூடங்குளம் அணு மின் நிலையம், கூடங்குளத்தில் இரு 1000 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் ரஷ்ய நாட்டின் தொழில் நுட்ப உதவியுடனும், கர்நாடகத்தில் உள்ள கைகாவில் 220 மெகா வாட் திறன் கொண்ட அணு உலையும் விரைவில் கட்டி முடிக்கப்படும்.‎[3]

இதைத் தவிர கக்ரபார் அணுமின் நிலையம், கக்ரபாரிலும் (குஜராத்), ராஜஸ்தான் அணுமின் நிலையம், ராவட்பட்டாவிலும் (ராஜஸ்தான்) முறையே முழுக்க முழுக்க இந்திய தொழில் நுட்பத்துடன் இரு 700 மெகா வாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இவை யாவும் உயர்ந்த அழுத்தத்தில் செயல்படும் கனநீரைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் அணு உலைகளைக் கொண்டது.
இந்திய அணு மின் கழகம் 2017 ஆம் ஆண்டில் அணு மின் நிலையங்கள் மூலம் 9580 மெகா வாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யவும், 2000 ஆம் ஆண்டில் 20,000 மெகா வாட் அளவும், 2020 ஆம் ஆண்டில் 60,000 மெகா வாட் அளவும் படிப்படியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.‎[4]
இந்த விரிவாக்கத்திற்கு தேவைப்படும் நிதியுதவி, பங்குகளில் பங்கேற்பு மற்றும் ஆலோசனைகள் வழங்க பவர் கொர்போரேசன் நிறுவனம் முன்வந்துள்ளது.‎[5]

கைகாவில் நான்காவது அணு மின் நிலையம்

கைகாவில் நான்காவது அணு மின் நிலையம் 24-11-2010 முதல் செயல்படத் துவங்கியது. இதுவே இந்தியாவில் தற்பொழுது செயல்பாட்டில் உள்ள இருபதாம் அணு உலை ஆகும். இந்தச் சாதனை மூலம் உலகில் அணு மின் நிலையங்களை இயக்குவதன் வழியாக மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு மின்சாரம் தயாரிப்பதில் அமேரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா, கொரியா நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. மேலும் இதன் மூலமாக இந்தியாவில் அணு மின் நிலையங்களில் இருந்து தயாரிக்கும் மின்சாரத்தின் ஒட்டுமொத்த அளவு 4780 மெகா வாட் ஆக அதிகரித்துள்ளது.[6]

வணிக ரீதியில் அணு மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் தயாரித்தல்

இந்திய அணுமின் கழகம் அணு மின் நிலையங்களை அமைத்து வணிக ரீதியில் மின்சாரம் தயாரித்து வழங்குவதற்கான திட்டங்களை ஒன்றிய அரசின் அனுமதியுடன் தீட்டியுள்ளது. இதன் படி பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து மகாராட்டிர மாநிலத்தில் இரத்தினகிரி மாவட்டத்தில் கொண்கன் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள மதுபன் கிராமத்தில் ஜைத்தாபூர் அணு மின் நிலையத்தை ஜைத்தாபூரில் அமைக்கும் திட்டம் வணிக ரீதியில் முதலாவது திட்டமாகும். ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் சில நிபந்தனைகளை விதித்து திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இங்கு 9900 மெகா வாட் உற்பத்தித் திறனுடன் கூடிய மின்சாரம் தயாரிப்பதற்கு இந்திய அணு சக்திக் கழகம் திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக இங்கு மிகவும் நவீன தொழில் நுட்பம் கொண்ட 1650 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு மின் உலைகள் நிறுவப்படும்.[7] பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனம் அவேராவுடன் (Avera) இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப் படும்.

No comments:

Post a Comment