இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்
இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Authority of India, SAI) இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் விளையாட்டினைப் பரப்பவும் கட்டமைப்புகளை மேம்படுத்தவும் இந்திய அரசின்
இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் 1984இல்
நிறுவப்பட்ட மீயுயர் தேசிய விளையாட்டு அமைப்பாகும். இதன்கீழ் பெங்களூரு,
காந்திநகர், சண்டிகர், கொல்கத்தா, இம்பால், குவகாட்டி, போபால், இலக்னோ,
சோனேபட் இடங்களில் அமைந்துள்ள ஒன்பது வட்டார மையங்களும் பாட்டியாலா,
திருவனந்தபுரம் ஆகியவிடங்களில் அமைந்துள்ள இரண்டு விளையாட்டுத்துறை கல்வி
நிறுவனங்களும் உள்ளன. பாட்டியாலாவிலுள்ள நேதாசி சுபாசு தேசிய விளையாட்டுக்
கழகத்திலும் பெங்களூரு, கொல்கத்தா போன்ற சில வட்டார மையங்களிலும்
பயிற்றுநருக்கான கல்வியும் விளையாட்டு மருந்தியல் கல்வியும்
வழங்கப்படுகின்றன. திருவனந்தபுரத்திலுள்ள இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக்
கல்லூரியில் உடற்பயிற்சிக் கல்வியில் பட்ட, பட்டமேற்படிப்பு
கல்வித்திட்டங்கள் நடத்தப்படுகின்றன.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் வட்டார மையங்களும் கல்விநிறுவனங்களும்
வ.எண். |
வட்டாரப் பகுதி |
வட்டார மையம்/கல்வி மையம் |
1. |
வடக்கு |
நேதாஜி சுபாசு தேசிய விளையாட்டுக் கழகம், பட்டியாலா, பஞ்சாப் பகுதி |
2. |
எசுஏஐ நேதாஜி சுபாசு வட்டார மையம், சண்டிகர் |
|
3. |
தேவிலால் வடக்கு வட்டார மையம், சோனிபத், அரியானா |
|
4. |
எசுஏஐ நேதாஜி சுபாசு வட்டார மையம், இலக்னோ, உத்தரப் பிரதேசம் |
|
5. |
நடுவண் |
எசுஏஐ உத்தவ் தாசு மேத்தா நடுவண் மையம், போபால், மத்தியப் பிரதேசம் |
6. |
கிழக்கு |
எசுஏஐ நேதாஜி சுபாசு கிழக்கு வட்டார மையம், கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
7. |
வட-கிழக்கு |
எசுஏஐ நேதாஜி சுபாசு வடக்கு-கிழக்கு வட்டார மையம், இம்பால், மணிப்பூர் |
8. |
எசுஏஐ நேதாஜி சுபாசு வடக்கு-கிழக்கு வட்டார மையம், குவகாத்தி, அசாம் |
|
9. |
தெற்கு |
எசுஏஐ நேதாஜி சுபாசு தெற்கு வட்டார மையம், பெங்களூர், கருநாடகம் |
10. |
இலட்சுமிபாய் தேசிய உடற்பயிற்சிக் கல்லூரி, திருவனந்தபுரம், கேரளம் |
|
11. |
மேற்கு |
எசுஏஐ நேதாஜி சுபாசு மேற்கு வட்டார மையம், காந்திநகர், குசராத்து |
விளையாட்டரங்கங்கள்
இந்த ஆணையத்திடம் தில்லியிலுள்ள கீழ்க்கண்ட ஐந்து விளையாட்டரங்கங்களைப் பராமரிக்கும், பயன்படுத்தும், மேம்படுத்தும் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது:- இந்திரா காந்தி விளையாட்டரங்கம்
- முனைவர்.சியாமாப் பிரசாத் முகர்ச்சீ நீச்சற்குள வளாகம்
- முனைவர். கர்ணிசிங் துப்பாக்கிச் சுடும் களங்கள்
No comments:
Post a Comment