தமிழ்நாட்டு ஊர்களும் உணவுகளும்
தமிழ்நாடு பல வகை இனிப்பு, நொறுக்குத்தீனி, சிற்றுண்டி, சைவ / அசைவ சாப்பாடு, பழங்கள், காய்கறிகள் ஆகிய எல்லா உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றது. இக்கட்டுரை தமிழ்நாட்டு உணவு வகைகளின் சிறு தொகுப்பாகும்.
பொருளடக்கம்
மரபு சமையல் வகைகள்
- கொங்குநாட்டு சமையல்
- செட்டிநாட்டு சமையல்
- சேலம் சமையல்
- தஞ்சாவூர் சமையல்
- மதுரை சமையல்
- விருதுநகர் சமையல்
- திண்டுக்கல் சமையல்
- தூத்துக்குடி சமையல்
இனிப்பு
- ஆற்காடு மக்கன் பேடா : பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு.
- திருவண்ணாமலை பாயாசம் ,போலி, சுய்யான் உருண்டை ( உள்ளே பருப்பு , திணை மாவு வெள்ளம் கலந்த உருண்டையை வைத்து மேலே அரிசி மாவை கரைத்து தயாரிக்கப்பட்ட மாவில் தோய்த்து பொரிப்பது - ஒரு பண்டைய உணவு) .
- காரைக்கால்குலாப் ஜாமுன் : ரெடிமேட் மிக்ஸ் உதவியுடன் எளிதாக செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- கோவில்பட்டி கடலைமிட்டாய் : வேர்க்கடலை மற்றும் சர்க்கரைப்பாகு கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- சாத்தான்குளம் மஸ்கோத் அல்வா : கோதுமை, தேங்காய் சர்க்கரை, மற்றும் முந்திரி கொண்டு செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- திருநெல்வேலி அல்வா : சம்பா கோதுமை, சர்க்கரை, நெய், மற்றும் முந்திரி கொண்டு புலம்பெயர்ந்த வட இந்தியர்களால் திருநெல்வெலியில் செய்யப்படும் உலகப்புகழ் பெற்ற ஒரு வகை இனிப்பு.
- தூத்துக்குடி மக்ரூன்: தூத்துக்குடியில் நிலை கொண்ட போர்ச்சுகீசியர்களின் முந்திரியும் முட்டையும் கலந்து செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- பாலவநத்தம் சீரணி மிட்டாய் : ஒரு வகை இனிப்பு மிட்டாய்
- வெள்ளியணை அதிரசம் (கச்சாயம்) பச்சரிசி, வெல்லம், நெய் என கூட்டுப் பொருட்களால் செய்யப்படும் ஒரு வகை இனிப்பு
- ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா : பாலை சுண்டக் காய்ச்சினால் கிடைப்பது
- திருச்செந்தூர் சில்லுக்கருப்பட்டி : பனம்பாலில் சுக்கு சேர்த்து காய்ச்சி அச்சில் வார்த்த கருப்பட்டி
- பட்டுக்கோட்டைநெய் அசோகா அல்வா: பாசிப்பருப்பு நெய் ஏலக்காய் ஜீனி சேர்த்து தயாரிக்கப்படும் சத்தான சுவையான இனிப்பு.
நொறுக்குத் தீனி
- அருப்புக்கோட்டை காராச்சேவு : கடலை மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
- திருவண்ணாமலை எள்ளடை - அரிசிமாவு எள் கலந்து தயரிகப்பதும் ஒரு பதார்த்தம் .
- ஊட்டி வர்க்கி : சுவை மிக்க பேக்கரி தயாரிப்பான நொறுக்குத்தீனி
- கல்லிடைக்குறிச்சி அப்பளம் : உளுந்து மாவில் செய்யப்படும் பாதி சமைத்த நொறுக்குத் தீனி அல்லது துணை உணவு
- காரைக்குடி தேன்குழல், மண ஓலை, அச்சுமுறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
- மணப்பாறை முறுக்கு : அரிசி மற்றும் உளுந்து மாவு கொண்டு தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி
பானம்
- திருவண்ணாமலை பாயாசம் :பாலில் செய்யப்பட்ட ஒரு வகை இனிப்பு பானம்.
- கும்பகோணம் டிகிரி காபி : காப்பி பில்டரில் டிகாக்சன் வடிகட்டி திடமான பால் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் பானம்
- மதுரை ஜிகிர்தண்டா : ஜிகிர்தண்டா என்றாலே இதயத்தை குளிர வைக்கும் பானம் என்று அர்த்தம். சைனா கிராஸ் `ரோஸ் ஸிரப்', நன்னாரி சிரப், கெட்டியாகக் கொதிக்கவிட்ட பால், ஐஸ்கிரீம் சேர்த்து செய்யப்படும் பானம்
- பட்டுக்கோட்டை மசாலா பால்:சுத்தமான பசும்பால் ,முந்திரிபருப்பு ,பாதாம் பருப்பு,மஞ்சள் தூள் .சுக்கு,ஏலக்காய் ,முதலியவை கலந்து தயாரிக்கப்படும்
சுவையான சூடான பானம்.
சாப்பாடு
- ஆம்பூர் பிரியாணி : அசைவ உணவு
- திருவண்ணாமலை :திணை சோறு , சாமை வாரகு கொள்ளு குழம்புகள் , களி , கூழ் .
- காரைக்குடி உப்புக்கண்டம் : ஆட்டு இறைச்சியை உலர்த்தி செய்த அசைவ உணவு
- சிதம்பரம் இறால் வருவல் : இறால் அசைவ உணவு
- பிரானூர் (குற்றாலம்) நாட்டுக்கோழி சுக்கா : அசைவ உணவு
- புதுக்கோட்டை சிறுமீன் : அசைவ உணவு
- இராமேசுவரம் மாசிக் கருவாடு : உலர்த்திய மீன் அசைவ உணவு
- வேலூர் (நாமக்கல்) வாத்துக்கறி : அசைவ உணவு
- கீழக்கரை நொதில் : இஸ்லாமிய அசைவ உணவு
- மதுரை அயிரை மீன் குழம்பு : அசைவ உணவு
- மதுரை இட்லி : சைவ உணவு
- விருதுநகர் புரோட்டா : சைவ சிற்றுண்டி
- திண்டுக்கல் பிரியாணி : அசைவ உணவு (தலப்பாகட்டி பிரியாணிக் கடை)
சமைக்காத உணவு
- கொல்லிமலை: தேன்
- ஊத்துக்குளி: வெண்ணெய்
- திருச்செந்தூர்: பனங்கற்கண்டு
- வால்பாறை: தேநீர்
- வேம்பார்: கருப்பட்டி
பழங்கள்
- சத்தியமங்கலம்: வாழைப்பழம்
- சிறுமலை: வாழைப்பழம் (மலை வாழை)
- சேலம்: மாம்பழம்
- கொடைக்கானல்: பேரிக்காய்
- நெய்வேலி: முந்திரி
- பண்ருட்டி: பலாப்பழம்
காய்கறி
- அரவக்குறிச்சி: முருங்கை
- ஊட்டி: உருளைக் கிழங்கு
- ஒட்டன்சத்திரம்: கத்தரிக்காய்
- ஊட்டி: முட்டைக்கோசு
- கும்பகோணம்: வெற்றிலை
- பொள்ளாச்சி: தேங்காய்
- கொல்லிமலை: அன்னாசி
- கோட்டாறு: தேங்காய்
பிற
- தேனி: கரும்பு
- திருமங்கலம்: குறும்பாடு
No comments:
Post a Comment