Tuesday 31 October 2017

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறை

தமிழ்நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வரும் தென்னிந்திய மாநிலமாகும். நீண்ட வரலாற்றையும் தனித்துவ பண்பாட்டையும் அழகிய நிலப்பகுதிகளையும் தமிழ்நாடு கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் சுற்றுலாத்துறை இந்தியாவில் இரண்டாம் நிலையில் இருக்கிறது. 2006 ஆம் ஆண்டு 40 550 382 சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டுக்கு வந்தனர். இவர்களில் 39214721 உள்ளூர் பயணிகள் 1335661 வெளியூர் பயணிகள்.[1]
பண்டைத் தமிழர் தமிழ்நாட்டின் இட அழகை முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என வகுத்து விபரித்தனர். அதாவது தமிழ்நாடு காடு, மலை, பாலை, வயல், கடல் ஆகிய இயற்கை அழகைக் கொண்டது. எழில் கொஞ்சும் நீலகிரி மற்றும் கோடைக்கானல் மலைப் பகுதிகள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய அடர்ந்த வனப் பகுதிகள், கிழக்கு கடற்கரை பகுதிகள் போன்ற மனம் கவரும் பல இடங்கள் உண்டு.
தமிழ்நாடு பாரம்பரியச் சின்னங்கள் நிறைந்த இடமாகும். திராவிட கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் கோயில்களுக்குப் புகழ் பெற்றது. இக்கோயில்களுக்கு வியக்க வைக்கும் கோபுரங்களும் ரதங்களும் அழகு சேர்க்கின்றன. சோழர் கால தஞ்சைப் பெரிய கோவிலும் பல்லவர் கால மாமல்லபுரம் சிற்பங்களும் கோவில்களும் உலகப் பாரம்பரியச் சின்னங்களாக அங்கீகரிக்கப் பட்டுள்ளன. தஞ்சை, மதுரை, சுவாமிதோப்பு மற்றும் காஞ்சி ஆகியவை கோயில் நகரங்களாகத் திகழ்கின்றன. கன்னியாகுமரி கடல் முனையில் அமைந்துள்ள வள்ளுவர் சிலையும் காண வேண்டிய இடமாகும்.

உள்நாட்டு சுற்றுலா துறை

2014 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [2] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வரிசை மாநிலம் எண்ணிக்கை
1 தமிழ்நாடு 327.6 மில்லியன்
2 உத்தர பிரதேசம் 182.8 மில்லியன்
3 கர்நாடகா 118.3 மில்லியன்
2013 ஆண்டின் உள்நாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [3] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 தமிழ்நாடு 244232487 21.3
2 உத்தர பிரதேசம் 226531091 19.8
3 ஆந்திர பிரதேசம் 152102150 13.3

2012 ஆண்டின் உள்நாட்டுச் சுற்றுலாத் துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [4] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 ஆந்திர பிரதேசம் 206817895 20.0
2 தமிழ்நாடு 184136840 17.8
3 உத்தர பிரதேசம் 168381276 16.2

வெளிநாட்டு சுற்றுலா துறை

2014 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [5] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வரிசை மாநிலம் எண்ணிக்கை
1 தமிழ்நாடு 4.66 மில்லியன்
2 மஹாராஸ்திரா 4.39 மில்லியன்
3 உத்தர பிரதேசம் 2.91 மில்லியன்
2013 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [6] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 மஹாராஸ்திரா 4156343 20.8
2 தமிழ்நாடு 3990490 20.0
3 தில்லி 2301395 11.5

2012 ஆண்டின் வெளிநாட்டு சுற்றுலா துறையினர் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்கள் [7] கீழே வரிசை படுத்தபட்டுள்ளன.
வரிசை மாநிலம் எண்ணிக்கை விழுக்காடு
1 மஹாராஸ்திரா 5120287 24.7
2 தமிழ்நாடு 3561240 17.2
3 தில்லி 2345980 11.3

இரவுநேரத்தில் ஒளியூட்டப்பட்ட திருவள்ளுவர் சிலை
தமிழ்நாட்டில் 5 தேசிய வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
  1. இந்திரா காந்தி வனவிலங்கு உய்வகம் மற்றும் தேசியப்பூங்கா [டாப்ஸ்லிப்],பொள்ளாச்சி
  2. முதுமலை தேசியப் பூங்கா ,நீலகிரி
  3. முக்குருத்தி வனவிலங்கு சரணாலயம்,நீலகிரி
  4. மன்னார் வளைகுடா தேசிய கடல்சார் உயிரியல் பூங்கா,மன்னார் வளைகுடா
  5. கிண்டி தேசியப் பூங்கா
  6. ஆனைமலை வன விலங்குகள் சரணாலயம்.

மலைவாசஸ்தலங்கள்

உதகை

உதகை 2,637 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நகரம். தொட்டபெட்டா சிகரம் உதகையில் அமைந்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிகரங்களிலேயே உயரமானது, தொட்டபெட்டா. தொட்டபெட்டாவின் உயரம் 2636 மீ. இதற்கு அடுத்தபடியாக 2530 மீ உயரம் கொண்ட ஸ்நோ டவுன் ஹில்லும், 2448 மீ உயரமுள்ள கிளப் ஹில்லும், 2466 மீ உயரமுள்ள எல்க்ஹில்லும் உள்ளன
உதகையின் முக்கிய சுற்றுலா தாவரவியல் பூங்கா. உதகை தாவரவியல் பூங்கா 1847-67 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்டது.
கேத்தி பள்ளத்தாக்குக் காட்சி உலகிலேயே இரண்டாவது பெரிய பள்ளத்தாக்கு என்ற புகழைப் பெற்றது. உதகை ஏரி படகு இல்லம் ஜான் சல்லிவன் என்பவரால் உருவாக்கப்பட்ட ஏரி. 1823-1825 ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

கொடைக்கானல்

கொடைக்கானல்
கொடைக்கானல் மேற்கு தொடர்சி மலைத்தொடரில் 7000 அடி உயரத்தில் அமைந்துள்ள நகரம்.கொடைக்கானல் ஏரி கொடைக்கானலின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. இதன் சுற்றுச் சாலை 5 கி.மீ. ஏரியின் அளவு 24 ஹெக்டேர். மதுரை மாவட்டத்தின் ஆட்சியராகப் பணியாற்றிய சர் வேரி ஹென்றி லெவிஞ்சி (1819-1885) என்பவர்தான் இந்த ஏரியை திருத்தி அழகுப்படுத்தினார். வெள்ளியருவி கொடைக்கானல் ஏரி வழிந்தால் உருவாகும் அருவியாகும்.
தூண் பாறைகள் ஏரியிலிருந்து 7.4 கி.மீ தொலைவில் உள்ளது. 122 மீட்டர் உயரத்தில் மூன்று செங்குத்தான தூண் பாறைகள் நிற்கின்றன. பசுமைப் பள்ளத்தாக்கு மிக மிக ஆழமும் அபாயமும் கொண்ட பள்ளத்தாக்கு. இதற்கு முந்தைய பெயர் தற்கொலை முனை. வைகை அணையை இங்கிருந்து ஓர் அழகான கோணத்தில் காணமுடியும். கோடை ஏரியிலிருந்து பசுமைப் பள்ளத்தாக்கு 5.5 கி.மீ. தொலைவில் இருக்கிறது.

நீர்விழ்ச்சி

குற்றாலம்

குற்றாலம் மெயின் அருவியின் தோற்றம் , இது தெற்கு ஆசியாவின் 'ஸ்பா' என்றழைக்கப்படுகிறது
குற்றாலம் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குமலைத்தொடரில் கடல் மட்டத்திலிருந்து 167அடியில் அமைந்திருக்கிறது. இங்கு ஒன்பதுக்கும் மேற்ப்பட்ட அருவிகள் உள்ளது.

ஒகேனக்கல் நீர்விழ்ச்சி

ஒகேனக்கல் அருவி ஆசியாவின் நயாகரா அருவி என்றழைக்கப்படுகிறது
ஒகேனக்கல் அருவி தருமபுரி மாவட்டத்தில் கர்நாடக மாநில எல்லைக்கருகே உள்ளது.

கேத்தரீன் நீர்விழ்ச்சி

டால்பின் மூக்கிலிருந்து, குன்னூர் அருகிலுள்ள கேத்தரீன் நீர்விழ்ச்சியின் தோற்றம்
இது நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரியில் அமைந்திருக்கிறது.

சுருளி நீர்விழ்ச்சி

சுருளி அருவி தேனி மாவட்டத்தில் மேகமலைத் தொடரில் அமைந்திருக்கிறது.

திற்பரப்பு நீர்விழ்ச்சி

திற்பரப்பு அருவி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது.

கிள்ளியூர் நீர்விழ்ச்சி

இது கிழக்கு மலைத்தொடரிலுள்ள சேர்வராயன் மலையில் ஏற்காட்டில் அமைந்திருக்கிறது.

Monday 30 October 2017

வேக வரம்புகள்

வேக வரம்புகள்

 வேக வரம்புகள் இந்தியா மாநில மற்றும் வாகன வகையினால் மாறுபடும். குறிப்பிடப்பட்டவைகளை விட குறைவான வரம்புகள் உள்ளூர் அரசாங்கங்களால் அமைக்கப்படலாம். அனைத்து வேகம் வரம்புகள் கிமீ / மணி.
மாநிலம் இருச்சக்கர வாகனம் இல்குரக வாகனம் (cars) நடுத்தர பயணிகள் வாகனம் நடுத்தர சரக்கு வாகனம் கனரக வாகனம் ஒரு டிரெய்லர் இழுக்கும் வாகனம் பல டிரெய்லர் இழுக்கும் வாகனம்
மற்ற வாகனங்கள்
ஆந்திர பிரதேசம் / தெழுங்கானா[1] 50 No default limit (65 for transport vehicles) 65 65 40/50 60 (50 if trailer > 800 kg) 50 30
மகாராஷ்ட்ரா[2] 50 No default limit (65 for transport vehicles) 65 65 65 50 50 50
டெல்லி[3] 30-70 25-50 20-40 20-40 20-40 20-40 20-40 20-40
உத்தர் பிரதேசம்[4] 40 40 40 40 20-40 20-40 20-40
ஹரியானா[5] 30/50 50 40/65 40/65 30/40 35/60 40/60 20/30
கர்நாடகா 50 No limit (60 for cars in Bangalore except in Airport road where it is 80, 100 for cars only on NH 66 between Mangalore and Udupi)[6] (65 for transport vehicles) 60 (KSRTC) 60 60 40/60 40/60
பஞ்சாப்[7] 35/50 50/70/80 45/50/65



30
தமிழ்நாடு 50 60





கேரளா[8] 30 (Near School) / 45 (In Ghat roads) / 50 (City/State Highway/ All other places) / 60 (National Highway) / 70 (4-lane highway) 30 (Near School) / 45 (In Ghat roads) / 50 (நகரம்) / 70 (மற்ற இடங்கள்) / 80 (மாநில நெடுஞ்சாலை) / 85 (தேசிய நெடுஞ்சாலை) / 90 (4-வழி நெடுஞ்சாலை)
30-40 (பள்ளிக்கு அருகில் /கட் சாலையில்/ நகரம்) / 50-65 (மற்ற இடங்கள் / மாநில நெடுஞ்சாலை / தேசிய நெடுஞ்சாலை) 70 (4-வழி நெடுஞ்சாலை) 30-40 (பள்ளிக்கு அருகில் /கட் சாலையில் / நகரம்) / 50-65 (மற்ற இடங்கள் / மாநில நெடுஞ்சாலை / தேசிய நெடுஞ்சாலை) 70 (4-வழி நெடுஞ்சாலை) 30 (பள்ளிக்கு அருகில் /கட் சாலையில்) / 40 (All other places /நகரம்) / 60 ( மாநில நெடுஞ்சாலை / தேசிய நெடுஞ்சாலை) / 65 (4-வழி நெடுஞ்சாலை) 25-30 (பள்ளிக்கு அருகில் /கட் சாலையில்) / 40-50 (மற்ற இடங்கள் /நகரம்) / 60 ( மாநில நெடுஞ்சாலை / தேசிய நெடுஞ்சாலை / 4-வழி நெடுஞ்சாலை) 25-30 (பள்ளிக்கு அருகில் /கட் சாலையில்) / 60 (மற்ற இடங்கள் ) / 40 - 50( மாநில நெடுஞ்சாலை / தேசிய நெடுஞ்சாலை / 4-lவழி நெடுஞ்சாலை / நகரம்) 25-30
2007 ஆம் ஆண்டில் சட்டம் ஒன்று தீர்மானிக்கப்பட்டது கார்களுக்கு மணிக்கு 100 கிமீ வேக வரம்பு அமைக்கவும், மோட்டார் சைக்கிள்களுக்காக மணிக்கு 65 கிமீ வேக் வரம்பு அமைக்கவும் திட்டமிடப்பட்டது, ஆனால் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.[9]

எக்ஸ்ப்ரெஸ்ஸில் மணிக்கு 100-120 கிமீ வேகத்தைக் காண முடியும் இது மிகவும் பொதுவானது, இந்த வேகம் இந்தியாவில் மிகக் குறைவாகவே உள்ளது, இது மிகவும் குறிப்பிடத்தக்கது மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே ஆகும். மோட்டார்சைக்கிள்கள் எக்ஸ்பிரஸ் வழிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. டெல்லி-ஆக்ரா நெடுஞ்சாலை, தில்லி- ஜெய்ப்பூர் நெடுஞ்சாலை, தில்லி-சண்டிகர் நெடுஞ்சாலை 80 கிமீ / மணி. 2008 இல் திறக்கப்பட்ட பெங்களூரு விமான நிலையம் எக்ஸ்பிரஸ்வே, 180 கிமீ / மணி வடிவமைப்பு வேகம் கொண்டிருக்கிறது.

Saturday 28 October 2017

இந்தியத் தரைப்படை

இந்தியத் தரைப்படை

இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப்பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர் மேலும், ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.[வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை.இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

குறிக்கோள்கள்:

இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப்பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.
  • முதன்மை குறிக்கோள் : நாட்டின் பாதுகாப்பு நலன், அரசுரிமையை பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பை பாதுகாத்தல், இந்தியாவை வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்.
  • இதர குறிக்கோள்கள்: பிற மறைமுக போர்களில் அரசு முகமைகளுக்கு உதவுதல் மற்றும் பிற உள்நாட்டு அச்சுறுத்தல்களை களைதல், குடிமக்களுக்கு அவசர கால தேவையின் போது உதவியளித்தல்.

    வரலாறு:

    இந்திய தரைப்படையின் T-90 பீரங்கி வண்டி.
    இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டு , ஆங்கிலேய-இந்திய தரைப்படை இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. பெரும்பான்மையான படைகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன. இந்திய தரைப்படை ஆங்கிலேய-இந்திய தரைப்படையில் இருந்து உய்த்துணரப் பட்டதால், ஆங்கிலேய-இந்திய தரைப்படையின் அதே நிலைமுறை வடிவமும், சீருடைகளும், பழக்கவழக்கங்களும், ஆங்கிலேய மரபை ஒத்துள்ளது. நகைச்சுவையாக, இந்திய தரைப்படை இன்றைய ஆங்கிலேயருடைய படையினரை விட அதிகமாக ஆங்கிலேய மரபை பாதுக்காப்பதாக கூறுவர்.

    முதலாவது காசுமீர் போர் (1947)

    விடுதலை அடைந்த உடனே இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே காசுமீர் மாநில உரிமை மீதான சச்சரவின் மூலம் போர் மூண்டது. அந்நாளில் இசுலாமியர் பெரும்பான்மையான காசுமீர் மாநிலத்தை ஆண்ட இந்து அரசர் தன் மாநிலத்தை இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ சேர்க்க இணக்கம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, பாக்கித்தான் தன் படைகளை ஏவி காசுமீரத்தை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைக்க முயன்றது. காசுமீர் அரசர் அரிசிங் இந்தியாவின் படைத்துறை உதவியை நாடினார். இந்தியா முதலில் உதவ மறுத்தாலும், பின் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் கையொப்பம் ஆனதும் தன் படைகளை அனுப்பியது. இவ்வொப்பந்தத்தை பாக்கித்தான் இன்றளவும் ஏற்க மறுக்கிறது. இப்போரில் இந்திய தரைப்படைகள் காசுமீரின் தலைநகரான சிரீநகர் பகுதியில் வான்படையால் இறக்கப்பட்டனர். இப்போரில் இந்திய தரைப்படை தலைவர் செனரல் திம்மையா மாறுவேடத்தில் நேரடியாக பங்கேற்றார். மாநிலம் முழுவதும் நடைபெற்ற போரில் பல முன்னாள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போரிட்டனர். 1948ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாக்கித்தானிய போர் முடிவுக்கு வந்தது. இருதரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளை தமதாக்கிக் கொண்டு ஒரு தற்காலிக கட்டுப்பாட்டுக் கோட்டினை ஒப்புக்கொண்டு இயங்குகின்றனர்.

    இந்திய-சீன போர் (1962)

    இந்திய-சீன போரின் முடிவில் திருத்தியமைக்கப்பட்ட வரைபடம்
    1959இல் இருந்தே , இந்தியா, தனது படைகளை இந்திய–சீன எல்லையில், சீனா தனது பகுதிகளாக கருதும் பகுதிகளில் முன்னேற்றியது. பல சிறிய எல்லை சண்டைகளை இந்தியா தொடங்கினாலும், சீனா எந்தவித பதில் நடவடிக்கையையும் எடுக்க வில்லை.[5] திபெத் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில் இரு நாடுகளுக்குமிடையே உரசல்கள் கூடின.[6]
    இந்திய படை ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது படைவலுவைத் தவறாக கணக்கிட்டு மக்கள் சீனக் குடியரசுடனான எல்லை பிரச்சனையை போர் மூலம் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டது. 1962ஆம் ஆண்டு, இந்திய தரைப்படை பூடான், அருணாச்சல் பிரதேசம் எல்லை அருகே 5 கிலோமீட்டர் சீன எல்லைக்குள் முகாமிட்டது. சீனாவும் பல இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த்து குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் ஆக்கிரமித்த அகாசி சீன் பகுதிகளில் சீனா பல சாலைகளையும் உருவாக்கி இராணுவ நடவடிக்கைகளுக்கு வியூகம் அமைத்திருந்தது. பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சீன தரைப்படை இந்திய தரைப்படையை அக்டோபர் 12ல், தக்களா மேடு என்ற பகுதியில் திடீரென தாக்கியது. திடீர் தாக்குதலில் இந்திய தரைப்படை நிலைகுலைந்தது. அகாசி சின் வரையிலான பகுதிகளை திரும்ப கைபற்றுமாறு அன்றைய தலைமை அமைச்சர் நேரு ஆணையிட்டார். எனினும், வெகுதாமதமாக வந்த ஆணையால் இந்திய தரைப்படையால் போதுமான படைகளை நகர்த்த முடியாமல் போனது. மேலும், சீன படையினரின் அதிகமான எண்ணிக்கையும், சீனா எல்லையின் பல இடங்களில் தாக்குதலை துவக்கியதும், இந்திய தரைப்படையை சீர்குலைத்தன. சீனா அகாசி சின் பகுதியை மட்டுமல்லாது அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளையும் கைப்பற்றினர். சீனா தாம் கோரிய பகுதியை கைப்பற்றியதுடன் மற்ற சில பகுதிகளையும் கைப்பற்றியபின் மக்கள் சீனக் குடியரசு இந்திய அரசை சமரசத்திற்கு அழைத்தது. ஆனால் இந்தியா சமரசத்தை வேண்டாது தொடர்ந்து போரில் ஈடுபட, சீனா தாமாகவே அருணாச்சல் பிரதேச மாநிலத்தை விட்டு பின்வாங்கியது. இந்திய பாதைகளின் மோசமான தோல்வி பல கேள்விகளை எழுப்பியது. கென்டர்சன் பூருக்ஸ் என்பவர் தலைமையில் தோல்வியின் காரணங்களை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் முடிவின்படி இந்திய படைத்துறையின் தலைமையும் இந்திய அரசியல் தலைமையும் இத்தோல்விக்கு காரணம் என்று அறியப்பட்டது. மேலும் இந்திய தரைப்படை மிகக்குறைந்த அளவில் படையை பயன்படுத்தியதும், வான்படைகள் போதுமான அளவில் படைகளை நகர்த்த இயலாமையும் இந்திய படைத்துறையின் தவறுகளாக சுட்டப்பட்டன. அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருசுண மேனன் ஊடகங்களின் பெரும் கண்டனத்துக்கு ஆளானார்.

    கட்டளையகங்கள்

    இந்திய தரைப்படை 6 கட்டளையகங்களின் கீழ் இயங்குகிறது. ஒவ்வொரு கட்டளையகமும் லெப்டினன்ட் செனரல் தரத்திலுள்ள கட்டளை அலுவலகரின் கீழ் இயங்குகிறது. எல்லா கட்டளையகங்கள் புது டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி கட்டளையகம் சிம்லாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.
    கட்டளையகம் அமைவிடம்
    தெற்கு கட்டளையகம் புனே
    கிழக்கு கட்டளையகம் கொல்கத்தா
    மத்திய கட்டளையகம் லக்னோ
    மேற்கு கட்டளையகம் சண்டிமந்திர் ( சண்டிகர் )
    வடக்கு கட்டளையகம் உதம்பூர்
    தென் மேற்கு கட்டளையகம் ஜெய்ப்பூர்

    படைபலம்

    இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.
    இந்திய தரைப்படை படைபலம்
    செயலார்ந்த தீவிரப்பணி 1,300,000
    இருப்பு படை 1,200,000
    எல்லையோர பாதுகாப்பு படை 200,000**
    முதன்மை கவச தாங்கி வாகனம் 4,500
    பீரங்கி 12,800
    எறி ஏவுகணை 100 (அக்னி-1,அக்னி ஏவுகணை-2)
    எறி ஏவுகணை >500 (பிருத்வி -1)
    வழிகாட்டு இறக்கை ஏவுகணை பிரமோஸ்
    வானூர்திகள் 10 உலங்கு வானூர்தி ஸ்கோடரன் படைகள்
    தரைலிருந்து வான் தாக்கும் ஏவுகணை கள் 90000

    புள்ளி விபரங்கள்

    4 வது இராஜபுத்திர காலாட்படை பிரிவினர்
  • 4 RAPID படைகள்
  • 18 காலாட்படை பிரிவுகள்
  • 10 மலை பிரிவுகள்
  • 3 கவச வாகன பிரிவுகள்
  • 2 பீரங்கி பிரிவுகள்
  • 13 விமான எதிர்ப்பு பிரிகேட் + 2 தரைலிருந்து வான் தாக்கும் ஏவுகணை படையினர்
  • 5 தனி கவச வாகன பிரிகேட்
  • 15 தனி பீரங்கி பிரிகேட்
  • 7 தனி காலாட்படை பிரிகேட்
  • 1 வான்குடை பிரிகேட்
  • 4 பொறியாளர் பிரிகேட்
  • 14 தரைப்படை உலங்கு வானூர்தி படைகள்

Friday 27 October 2017

இந்தியக் குடியரசின் அமைச்சரவை

இந்தியக் குடியரசின் அமைச்சரவை

இந்திய ஆய மற்றும் இணை அமைச்சரவை

இந்த பட்டியல் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையின் பட்டியலாகும். அனைத்து அமைச்சர்களும் புது தில்லியில் உள்ள இந்திய ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின்படி அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம் பெறுபவர் இந்திய அரசியலைமைப்பில் வரையறுத்துள்ளபடி அமைச்சர் பொறுப்பேற்கும் உறுப்பினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் உறுப்பினராக இருக்கவேண்டும். அந்த விதியின்படி பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்ற கீழவை அதாவது மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமர் பொறுப்பை (2014-2019) இந்த அமைச்சரவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் பின்வரும் மூன்று வகையில் இறங்குவரிசைகளின் படி பொறுப்பேற்கின்றனர்.
  • ஒன்றிய ஆய அமைச்சர் (cabinet-கேபினட்)- அமைச்சகத்தின் முதுநிலை (அ) மூத்த அமைச்சர். ஆய அமைச்சர் கூடுதலாக பிற அமைச்சகத்தின் அலுவல்களையும், அந்த அமைச்சகத்திற்கு அமைச்சர் நியமனம் செய்யப்படாத பட்சத்தில், மேற்கொள்வார். பிரதமர் தலைமையேற்கும் கேபினட் கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்வதால் (கேபினட்) ஆய அமைச்சர் என அழைக்கப்படுகிறார்.
  • ஒன்றிய இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)- ஆய அமைச்சர் மேற்பார்வையிடாத (அ) கண்காணிக்காத இலாக்காவை கவனிப்பர்.

ஒன்றிய இணை அமைச்சர்

  1. சித்தேஸ்வரா - விமான போக்குவரத்து,
  2. மனோஜ் சின்கா - ரயில்வே,
  3. நிஹல்சந்திரா - உரம் மற்றும் ரசாயனம்,
  4. உபேந்திரா குஷ்வாஹா - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்,
  5. பொன். இராதாகிருஷ்ணன் - கனரக தொழில்துறை,
  6. கிரண் ரிஜிஜூ - உள்துறை,
  7. கிரிஷன் பால் - கப்பல், சாலை போக்ககுவத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை,
  8. சஞ்ஜீவ் குமார் பல்யான் - வேளாண்துறை மற்றும் உணவு பதப்படுத்துதல்,
  9. மன்சுக்பாய் தான்ஜிபாய் வாசவா - பழங்குடியினர் நலம்,
  10. ராவ்சாஹிப் ததாராவ் தான்வி - நுகர்வோர் மற்றும் உணவு மற்றும் பொஆது பங்கீடு,
  11. விஷ்ணு தியோ சாய் - சுரங்கம், உருக்கு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாயப்பு
  12. சுதர்சன் பகத் - சமூக நீதி மற்றும் மேம்பாடு.