Friday 27 October 2017

இந்தியக் குடியரசின் அமைச்சரவை

இந்தியக் குடியரசின் அமைச்சரவை

இந்திய ஆய மற்றும் இணை அமைச்சரவை

இந்த பட்டியல் தற்பொழுது அமைக்கப்பட்டிருக்கும் அமைச்சரவையின் பட்டியலாகும். அனைத்து அமைச்சர்களும் புது தில்லியில் உள்ள இந்திய ஒன்றிய அமைச்சரவை அலுவலகத்தின்படி அமர்த்தப்பட்டுள்ளனர். அமைச்சரவையில் இடம் பெறுபவர் இந்திய அரசியலைமைப்பில் வரையறுத்துள்ளபடி அமைச்சர் பொறுப்பேற்கும் உறுப்பினர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதாவதொன்றில் உறுப்பினராக இருக்கவேண்டும். அந்த விதியின்படி பிரதமர் நரேந்திர மோதி நாடாளுமன்ற கீழவை அதாவது மக்களவை உறுப்பினராக இருந்துகொண்டு பிரதமர் பொறுப்பை (2014-2019) இந்த அமைச்சரவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்கள் பின்வரும் மூன்று வகையில் இறங்குவரிசைகளின் படி பொறுப்பேற்கின்றனர்.
  • ஒன்றிய ஆய அமைச்சர் (cabinet-கேபினட்)- அமைச்சகத்தின் முதுநிலை (அ) மூத்த அமைச்சர். ஆய அமைச்சர் கூடுதலாக பிற அமைச்சகத்தின் அலுவல்களையும், அந்த அமைச்சகத்திற்கு அமைச்சர் நியமனம் செய்யப்படாத பட்சத்தில், மேற்கொள்வார். பிரதமர் தலைமையேற்கும் கேபினட் கூட்டங்களில் இவர்கள் கலந்து கொள்வதால் (கேபினட்) ஆய அமைச்சர் என அழைக்கப்படுகிறார்.
  • ஒன்றிய இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)- ஆய அமைச்சர் மேற்பார்வையிடாத (அ) கண்காணிக்காத இலாக்காவை கவனிப்பர்.

ஒன்றிய இணை அமைச்சர்

  1. சித்தேஸ்வரா - விமான போக்குவரத்து,
  2. மனோஜ் சின்கா - ரயில்வே,
  3. நிஹல்சந்திரா - உரம் மற்றும் ரசாயனம்,
  4. உபேந்திரா குஷ்வாஹா - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்,
  5. பொன். இராதாகிருஷ்ணன் - கனரக தொழில்துறை,
  6. கிரண் ரிஜிஜூ - உள்துறை,
  7. கிரிஷன் பால் - கப்பல், சாலை போக்ககுவத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை,
  8. சஞ்ஜீவ் குமார் பல்யான் - வேளாண்துறை மற்றும் உணவு பதப்படுத்துதல்,
  9. மன்சுக்பாய் தான்ஜிபாய் வாசவா - பழங்குடியினர் நலம்,
  10. ராவ்சாஹிப் ததாராவ் தான்வி - நுகர்வோர் மற்றும் உணவு மற்றும் பொஆது பங்கீடு,
  11. விஷ்ணு தியோ சாய் - சுரங்கம், உருக்கு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாயப்பு
  12. சுதர்சன் பகத் - சமூக நீதி மற்றும் மேம்பாடு.

No comments:

Post a Comment