Tuesday 10 October 2017

விளம்பரம்


 விளம்பரம் (advertising) என்பது தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் பிராண்டுகளைஅல்லது ஒரு குறிப்பிட்ட வகை தயாரிப்புகள் அல்லது சேவைகளை அதிக அளவில் வாங்க உண்டாக்கப்பட்ட தொடர்பு சாதனம்.
19ஆம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒட்டுமொத்த உற்பத்தி அதிகமானதை தொடர்ந்து நவீன விளம்பரங்கள் முன்னேற்றமடைந்தன.[1]
வடிவமைக்கப்பட்ட மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட "வடிவம்" மூலம் அந்தக்குறிப்பிட்ட சாதனங்கள் ,சேவைகளின் கொள்முதலை அதிகப்படுத்தும் வகையில் நிறைய விளம்பரங்கள் வடிவமைக்கப்படுகின்றன. இந்த மாதிரியான நோக்கத்திற்காக சில விளம்பரங்கள், அவர்களுடைய விடாப்பிடியான செய்தியை சில சமயங்களில் உண்மையான தகவல்களுடன் சேர்த்துவிடுவதுண்டு. தொலைக்காட்சி,வானொலி, திரைப்படம்,பத்திரிக்கைகள்,செய்தித்தாள்கள்,வீடியோ கேம்ஸ்,இணையதளம் ,சாமான் தரும் பைகள், மற்றும் விளம்பர அட்டைகள் என அனைத்து பெரிய அளவிலான வழிமுறைகளும் இத்தகைய செய்திகளை பரப்ப பயன்படுத்தப்படுகிறது.ஒரு நிறுவனம் அல்லது மற்ற நிறுவனங்களின் தரப்பில் இருந்து ஏதாவதொரு விளம்பர நிறுவனம் மூலம் பெரும்பாலும் விளம்பரங்கள் இடம்பெறுகின்றன.
விளம்பரங்கள், பொருளாதாரத் தேவைகளுக்கு மிக அத்யாவசியமானதாக தெரிந்தாலும், சமூக இழப்புகளும்இல்லாமல் இல்லை. தேவையில்லாத மின் அஞ்சல் மற்றும் இதர வகையான தேவையில்லாத ஸ்பாம் நிறைய ஆக்கிரமித்து, இந்த மாதிரி சேவையை உபயோகிப்பவர்களுக்கு ஒரு பெரிய இடையூராகி விட்டன, மேலும் இணய வலை [4] நிதி வகையில் இது பெரிய பாரமாகிவிட்டது. விளம்பரங்கள் மிக அதிக அளவில் பொது இடங்களில் நுழைந்து, அதாவது பள்ளிகளில் வந்ததை விமர்சகர்கள் இது ஒரு வகையான குழந்தைகளுக்கு இழைக்கப்படும் துரோகம் /ஏமாற்று என்று வாதாடுகிறார்கள்[5] அதோடு, விளம்பரங்கள் லட்சியமுள்ள வாடிக்கையாளரின் மேல் மனோதத்துவ அழுத்தத்தை பயன்படுத்துவது கேடு விளைவிக்கும் .

    பொருளடக்கம்

  • 1 வரலாறு
  • 2 விளம்பரத்தின் வகைகள்
    • 2.1 ஊடகங்கள்
      • 2.1.1 மறைமுக விளம்பரம்
      • 2.1.2 தொலைகாட்சி வர்த்தக விளம்பரங்கள்
      • 2.1.3 தகவல் வர்த்தகங்கள்
      • 2.1.4 பிரபலங்கள்.
      • 2.1.5 ஊடகம் மற்றும் விளம்பர அணுகுமுறைகள்

        வரலாறு

        கின்செய்டன் என்னும் பாரம்பரிய மருந்து விற்பனைக்கான 1806_ ம் ஆண்டு எடோ கால விளம்பரம்
        எகிப்தியர்கள்,விற்பனை செய்திகள் மற்றும் சுவரொட்டிகளுக்கு பாபிரசை பயன்படுத்தினார்கள் . பண்டைய அரேபியா மற்றும் போம்பீயில் சிதிலங்களில் வணிகச்செய்திகளும், அரசியல் பிரச்சாரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பண்டைய கிரேக்க மற்றும் ரோமில் தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பந்தமான பாபிரஸ் விளம்பரங்கள் சாதாரணமானவை. பண்டைய காலத்து விளம்பரவகைகளில் சுவர் அல்லது பாறை ஓவியங்கள் மற்றொரு வகைத்திருப்பம் ஆகும். இவ்வகை இன்றும் ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் இருக்கின்றன. 4000 BCE - க்கு முன்னாள் இருந்தே சுவர் ஓவிய பாரம்பரிய நாகரீக வழக்கம் இந்தியப்பாறை கலை ஓவியங்களில் நாம் காணலாம்.[6]
        இடைக்கால ஆண்டுகளில் நகரங்களும் ,பெரு நகரங்களும் வளர்ந்து வந்த நிலையில், மற்றும் வாசிக்கத் தெரியாத பொதுமக்கள் மத்தியில் இன்றைய காலக் கட்டத்தில்,செருப்பு தைப்பவர், மாவுமில் வைத்திருப்பவர், தையற்காரர்,அல்லது கொல்லர் தங்கள் தொழில் சம்மந்தப்பட்ட ஒரு படத்தை அடையாளமாக பயன்படுத்தும்போது, அதாவது ஒரு காலணி, ஒரு சட்டை, ஒரு தொப்பி, ஒரு கடிகாரம், ஒரு குதிரை லாடம் , ஒரு மெழுகுவர்த்தி, அல்லது ஒரு பை மாவு அவர் செய்யும் தொழிலை இந்த அடையாளங்களின் மூலம் மக்கள் புரிந்துகொண்டார்கள். காய்கறி மற்றும் பழங்களை நகரத்தின் நார்ச்சந்திகளில் தங்கள் வண்டிகளிலும், மற்றும் வாகனங்களின் மீதும் வைத்து விற்கும் அவற்றின் சொந்தக்காரர்கள், தெருவில் கூவுபவர்களையும், அல்லது நகர தம்பட்டக்காரர்களையும் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் வசதிக்காகத் தங்கள் இருப்பிடத்தை இவர்கள் மூலம் அறிவிப்பார்கள்.

        நகரும் விளம்பரங்கள் பதாகைகள்

        மிச்சிகன் ஏரியில் ஒரு விளம்பரப்பலகை கொண்ட படகு வழியாக ரெட் ஐ பத்திரிகை அதன் கூர்நோக்க வாடிக்கையாளர்களை நார்த் அவின்யூ கடற்கரையில் அடைதல்
        இந்த நகரும் விளம்பரங்கள் - மின்னும் - நிறுத்தி வைக்கப்பட்ட அட்டைகள் அல்லது டிஜிட்டல் திரைகள். இந்த வகையில் அர்ப்பணிக்கப்பட்ட வாகனங்கள் முதலாளிகளால் முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட சாலைகளில் விளம்பரங்களை எடுத்துச் செல்வதற்காகவே செய்யப்பட்டவை. அல்லது அவைகள் இதற்காக சிறப்பாக பொருத்தப்பட்ட கார்கோ லாரிகள் ஆகக்கூட இருக்கும். பில் போர்டுகள் மின்சார ஒளியுடன்; சில பின்னால் விளக்குகள் பொருத்தியும், மற்றவைகள் ஸ்பாட் விளக்குகளுடனும் இருக்கும்.சில அலங்கார அட்டைகள் அசையாமலும், மற்றும் சில விளக்குகள் தொடர்ந்து அல்லது விட்டு விட்டு விளம்பரங்களைச் சுற்றி சுற்றி எரியும் ,அட்டைகளுடன் அசையவும் செய்யும்.
        நகரும் அலங்காரங்கள் உலகெங்கும் பெரு நகரங்களில் பல சந்தர்ப்பங்களில் உபயோகப்படுகின்றன. அவையாவன:
      • இலக்கு விளம்பரங்கள்
      • ஒருநாள், மற்றும் நீண்ட காலப்பிரச்சாரங்கள்
      • மகாநாடுகள்
      • விளையாட்டு நிகழ்ச்சிகள்
      • கடை திறப்பு விழாக்கள் மற்றும் அதுபோன்ற அறிமுக நிகழ்ச்சிகள்
      • சிறிய நிறுவனங்களின் பெரிய விளம்பரங்கள்.
      • மற்றவைகள்

      பொது சேவை விளம்பரங்கள்

      வர்த்தகப்பொருள்களை மற்றும் சேவைகளை ஊக்குவிக்கப்பயன்படுத்தும் அதே விளம்பர யுக்திகளை உபயோகித்து, பொது மக்களை வர்த்தகமல்லாத பிரச்சனைகளான , அரசியல் ஐடியாலஜி, எரிபொருள் சேமிப்பு, சமயத் தேர்ந்தெடுப்பு, மற்றும் வன பாதுகாப்பு போன்றவைகளைப்பற்றிய தகவல், கல்வியறிவு தந்து ஊக்குவிக்கப் பயன்படுகிறது.
      வர்த்தகமல்லாத முகமூடியில் விளம்பரங்கள், சக்திவாய்ந்த கல்வி சாதனமாக நிறைய பார்வையாளர்களை சென்றடைவதோடல்லாமல் ஊக்குவிக்கும் திறமையும் கொண்டுள்ளது. பொது மக்கள் அக்கறைக்காகப்பயன்படும்போது விளம்பரங்கள் தாங்கள் இருப்பதை உணர்த்துகின்றன.- வர்த்தக நோக்கங்களுக்காக தனியாக பயன்படுத்தப்படும் அதிக சக்தி வாய்ந்த கருவியாகும். என்று ஹோவர் கூஸேஜிற்குத் தெரிவித்தவர் டேவிட் ஓகில்வி ஆகும்.
      பொது சேவை விளம்பரங்கள், வர்த்தக நோக்கற்ற விளம்பரங்கள், பொது ஆர்வ விளம்பரங்கள், காரண சந்தையாக்கல், மற்றும் சமூக சந்தையாக்கல்கள் போன்றவைகள் வர்த்தக நோக்கமற்ற, பொது ஆர்வ வெளியீடுகள் மற்றும் முன்முயற்சிகள் சார்பாக பயன்படுத்தப்படும் விளம்பர மற்றும் சந்தையாக்கல் தொழில்நுட்பங்களின் (பொதுவாக வர்த்தக நிறுவனக் கூட்டாண்மைகளுடன்) வேறுபட்ட வார்த்தை வகையினங்கள் (அல்லது அம்சங்கள்) ஆகும்.
      அமெரிக்காவில் , தொலைக்காட்சி மற்றும் வானொலி லைசென்ஸ் FCC மூலம் பெற வேண்டுமானால், நிலையங்கள் சிறிதளவாவது பொது சேவை விளம்பரங்களை ஒளிபரப்பி இருக்கவேண்டும். இந்த தேவைகளை சந்திக்க, நிறைய ஒலிபரப்பு நிலையங்கள் அமேரிக்காவில், தேவையான பொது சேவை அறிவிப்புகளை ஒட்டு மொத்தமாக பின்னிரவுகளில் அல்லது அதிகாலையில் குறைந்த சதவிகித அளவு பார்வையாளர்கள் கவனிக்கும் நேரங்களில் வழங்கிவிட்டு ,அதிகப்பணம் தரும் விளம்பரதாரர்களுக்கு நிறையப் பகல் நேரங்கள் ,முக்கிய நேரங்கள் உள்ள வர்த்தக பகுதிகளை கொடுக்கிறது..
      பல அரசாங்கங்களின் ஆணையின் கீழ் , முதல் மற்றும் இரண்டாம் உலகப்போரின்போது உலகப் போரின்போது பொது சேவை விளம்பரங்கள் உச்சத்தை அடைந்தன.

      விளம்பரத்தின் வகைகள்

      ஊடகங்கள்

      மேலே உள்ள மனித வழிகாட்டுதல்கள் படத்தினைப்போன்று மனிதர்களுககு பணம் தந்து விளம்பரங்களை பிடித்துக் கொள்ளச்சொல்வது ஒரு பாரம்பரிய விளம்பர முறையாகும்.
      ஜிஏபி விளம்பரத்துடன் சிங்ப்பூரில் ஒரு பேருந்துபேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் விளம்பரதாரர்களுக்கு பிரபலமான ஊடகங்கள் ஆகும்
      இங்கோல்ஸ்டட் முக்கிய ரயில் நிலையத்தில் ஒரு டிபிஏஜி வகை 101 யுனசெஃப்விளம்பரங்களுடன்
      வர்த்தக விளம்பர ஊடகம், பெயிண்டிங்குகள், பில் போர்ட், தெரு அலங்கார மரப்பொருள்கள், அச்சடிக்கப்பட்ட பிலயர்ஸ், மற்றும் ரேக் கார்டுகள் ,ரேடியோ, சினிமா, மற்றும் தொலைக்காட்சி விளம்பரம், வலை தட்டிகள், மொபைல் தொலைபேசி திரைகள், ஷாப்பிங் வண்டிகள், வெப்பாப்-அப் விளம்பரம்ஸ்கை ரைட்டிங்,பேருந்து நிலைய பெஞ்சுகள், மனித பில் போர்ட் ,பத்திரிகைகள், செய்தித்தாள்கள் , நகரக் கூவி விற்பவர்கள், பேருந்துகளின் பக்கங்கள்,லோகோஜெட், ஆகாயவிமானத்தின் உள்ளில் செட் பாக் தட்டு மேசைகள், அல்லது தலைக்கு மேல் உள்ள சாமான்கள் போடும் பெட்டிகள், வாடகைக்கார்களின் கதவுகள், கூரைகள், பயணிகள் திரைகள் , மேடைகச்சேரி நிகழ்ச்சிகள், சுரங்கப்பாதை வழிகள், ரயில்கள், தூக்கி எறியும் டயர்களில் உள்ள இலாச்டிக் பான்ட், சூப்பர் மார்க்கட்டுகளில் விற்கும் ஆப்பிள்களில் உள்ள ஓட்டிகள், கடை வண்டிகளில் உள்ள கைப்பிடிகள், ஆடியோ,வீடியோ ஸ்ட்ரீமிங் திறக்கும் இடங்கள், சுவரொட்டிகள், நிகழ்ச்சிகளுக்கான சீட்டுகளின் பின்புறம், மற்றும் சூபர் மார்கட் ரசீதுகள் . எந்த ஒரு இடத்தை வழங்குபவர் அடையாளம் கண்டு செய்தியை கொடுக்க பணம் தருகிறார்களோ அந்த ஊடகம் தான் விளம்பரம் செய்தல் எனப்படும்.
      விளம்பரத்தின் தாக்கத்தை கணிக்கும் ஒரு முறை தான் ஆட் ட்ராக்கிங் எனப்படுகிறது.இந்த விளம்பர ஆராய்ச்சி முறை மூலம் குறிப்பிட்ட சந்தை இலக்குகளை பற்றிய கணிப்புகள் ஒரு பிராண்ட்,சாதனம்,அல்லது சேவை பற்றியது. இந்த கணிப்பு மாற்றங்கள் நுகர்வோரின் அதாவது நிறுவனத்தின் விளம்பரங்கள் மற்றும் அறிமுகங்களைப்பற்றி அறியும் திறன் ,நிலையைப்பொறுத்தது.ஆட் ட்ராக் கின் நோக்கம் பொதுவாக ஊடகத்தின் கனம் அல்லது அளிக்கும் திறன்/ நிலை, , ஊடகத்தின் வாங்கும் அல்லது இலக்கின் தாக்கம் மற்றும் விளம்பர செயல்திறன் அல்லது ஆக்கம் ஆகியவற்றின் தன்மை இவற்றின் ஒட்டுமொத்த விளைவுகளை கணக்கிட்டு அளிப்பதாகும். [12]

      மறைமுக விளம்பரம்

      மறைமுக விளம்பரம் ஒரு சாதனம் அல்லது ஒரு தனி பெயர் பிராண்ட், பொழுதுபோக்கு மற்றும் ஊடகத்தில் கலந்து மறைமுகமாக விளம்பரப்படுத்தப்படுவதாகும். உதாரணமாக, ஒரு படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏதாவதொரு பொருள் அல்லது குறிப்பிட்ட பிராண்டை உபயோகப்படுதுவதாகக் காட்டுவது. எடுத்துக் காட்டு மைனாரிட்டி ரிப்போர்ட்டாம் குருஸ், ஜான் ஆண்டர்டன் பாத்திரம் ஒரு போன் வைத்திருப்பார் அதில் நோக்கியாவின் சின்னம் மிகத் தெளிவாக பல்கேரி எழுதப்பட்டிருந்தது, திரைப்பட விளம்பரங்களின் மற்ற உதாரணங்கள் ஐ, ( I ) ரோபோட் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வில் சுமித் தான் அணிந்துள்ள கன்வேர்ஸ் ஷூக்களை பல முறை க்லாசிக்ஸ் என்று கூறுவார். ஏனெனில் அந்தப்படம் மிக தூரமான எதிர்காலத்தைப் பற்றியது. ஐ ரோபார்ட்ஸ் போன்ற படங்கள் எதிர்கால கார்களையும் அதாவது ஸ்பேஸ் பால்கள் , ஆடி மெர்சிடிஸ் பென்ஸ் இவற்றின் சின்னத்தை மிகத் தெளிவாக வாகனங்களின் முன்பகுதியில் காட்டியிருந்தன. தி மாட்ரிக்ஸ் ரீலோடட் படத்தை விளம்பரத்திற்காக, கடில்லாக் தேர்ந்தெடுத்தது. அதன் விளைவாக நிறையக் காட்சிகளில் காடில்லாக் கார்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன. இதைப்போல ஒமேகா வாட்சுகளின் சாதனங்கள், ஃபோர்டு வையோபிஎம்டபிள்யூ மற்றும் ஆஸ்டன் மார்டின் கார்கள் சமீபத்திய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் காணப்பட்டன, குறிப்பாக கேஸினோ ராயல் . பிளேட் ரன்னர் மிக வழக்கத்தில் இருந்த பொருளான கோகோ கோலா விளம்பர தட்டியை காண்பிப்பதற்காக மொத்தப்படமும் நிறுத்தப்பட்டது.

      தொலைகாட்சி வர்த்தக விளம்பரங்கள்

      டிவி வர்த்தகங்கள் தான் பொதுவாக மிக சக்திவாய்ந்த ஒட்டுமொத்த சந்தை விளம்பர முறையாகக் கருதப்படுகிறது. டிவி நெட் வொர்க்குகள் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளுக்கு இடையில் விளம்பரம் செய்ய அதிக விலை கேட்ப்பதில் இருந்தே இது தெளிவாகத் தெரிகிறது.வருடாந்திர சூப்பர் பவுல் மற்றும் ஃபுட்பால்விளையாட்டுதான் அமெரிக்காவிலேயே அதி முக்கியத்துவம் வாய்ந்த விளம்பர நிகழ்ச்சியாக அறியப்படுகிறது. ஒரு 30 விநாடிகள் இந்த விளையாட்டின் நடுவில் டிவி யில் தெரிய உத்தேசமான விலை $ 3 மில்லியன்கள்.( 2009 இல்)
      பெரும்பாலான டிவி வர்த்தகங்கள் ஒரு பாடல் அல்லது ஜிங்கிள் மூலம் கேட்பவர்கள் சீக்கிரமே அந்த சாதனத்துடன் சம்பந்தப்படுத்தி விடுகிற மாதிரி செய்கிறார்கள்..
      வழக்கமாக வரும் டிவி நிகழ்ச்சிகளுக்கு உள்ளில் உண்மையான விளம்பரங்களை கிராபிக்ஸ் மூலம் சேர்த்துவிடமுடியும். வெறும் பாக் டிராப்( பின் திரையாக) [13] ஆக இல்லாமல் உள்ளே இணைக்கப்படுகிறது. அல்லது ரிமோட் ஒலிபரப்புப் பார்வையாளர்களுக்கு தேவையில்லாத உள்ளூர் தட்டி விளம்பரங்களை ஓரம் கட்டிவிட பயன்படுகிறது.[14] மிகுந்த முரண்பாடாக உயிரில்லாதவைகள் பயன்படுத்தாமல் தட்டிகள் உள் நுழைக்கப்படுகின்றன.[15] வெர்ச்சுவல் சாதனங்கள் வைப்பதும் சாத்தியமாகும்.[16][17]

      தகவல் வர்த்தகங்கள்

      தகவல் வர்த்தகங்களில் இரண்டு வகைகள் உண்டு ,ஒன்று நீளமானது மற்றொன்று குறுகியது. நீளமானவையில் நேர அளவு 30 நிமிடங்கள். குறுகிய வகை 30 வினாடிகளில் இருந்து 2 நிமிடங்கள் வரை உள்ளது. இவை நேரடி வரவேற்பு டிவி (D R T V) வர்த்தகங்கள் அல்லது நேரடி வரவேற்பு சந்தை /வர்த்தகம் என அழைக்கப்படுகிறது.
      இதன் முக்கிய லட்சியம் ஒரு உள்ளுணர்வில் தேர்ந்தெடுத்தல், நுகர்வோர் அதன் அமைப்பை பார்த்து உடனே விளம்பரத்தில் காணும் தொலைபேசி எண் அல்லது வலைதள முகவரி வாயிலாக வாங்குவார். தகவல் வர்த்தகம் சாதனங்களைப்பற்றியும், அவற்றின் அமைப்பைப் பற்றியும் விளக்கம்,காட்சி, மற்றும் சாதனங்களைப்பற்றி செயல் முறை விளக்கம் தரும், அதோடு பொதுவாக நுகர்வோர் மற்றும் தொழிற்சாலை வித்தகர்களிடமிருந்து நிரூபணமும் தரும்.

      பிரபலங்கள்.

      இது போன்ற விளம்பர முறை பிரபலங்களின் சக்தி, புகழ், பணம், சிறப்பு ஆகியவற்றை பயன்படுத்தி தங்கள் சாதனங்கள் மற்றும் கடைகள் இவற்றை அறிமுகப்படுத்த, அடையாளம் தரும் நோக்கத்துடன் செயல்படுவது.வழக்கமாக விளம்பரதாரர்கள் தங்கள் பொருள்களை விளம்பரப்படுத்த, பிரபலங்கள் பிடித்த பொருள்களை பங்கு கொள்வது, அல்லது குறிப்பிட்ட பிராண்டு அல்லது டிசைனர் உடைகளை அணிந்து கொள்வதை பயன்படுத்துகிறார்கள். தொலைகாட்சி அல்லது அச்சு விளம்பரம், இவற்றில் அடிக்கடி பிரபலங்கள் விளம்பர பிரச்சாரத்தில் ஈடுபட்டு குறிப்பிட்ட அல்லது பொது சாதனங்களை விளம்பரம் செய்கிறார்கள்.

      ஊடகம் மற்றும் விளம்பர அணுகுமுறைகள்

      அதிக அளவில் மற்ற ஊடகங்கள் தொலைக்காட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டன ஏனெனில்டிவோ போன்ற உபகரணம் மற்றும் இணைய வலைகளை உபயோகிக்கும் நுகர்வோர் இவற்றுக்கு மாறத் தொடங்கியது தான்.
      சமீப காலமாக வேர்ல்டு வைட் வெப்பிலும்விளம்பரம் தொடங்கியுள்ளது. வலையை அடிப்படையாகக் கொண்ட விளம்பர இடங்கள், வலை பொருளடக்கத்தை சுற்றியுள்ள அவசியம் மற்றும் வலைத்தளம் பெறும் வரவைச் சார்ந்தே உள்ளது.
      மின் அஞ்சல் விளம்பரம் சமீபத்தில் ஆரம்பித்தது. தேவையில்லாத அதிக மின்- அஞ்சல் விளம்பரங்கள் தான் ஸ்பாம் என்று அழைக்கப்படுகின்றன.
      சில நிறுவனங்கள் தங்கள் செய்திகளையும், சின்னங்களையும்ராகேட்டுகளின் பக்கங்களிலும் மற்றும் சர்வதேச விண்வெளி நிறையங்களிலும் விளம்பரம் செய்கின்றன. மிகக்குறுகிய நேரத்தில் வரும் விளம்பரங்களின் தாக்கம் முரண்பாடை ஏற்படுத்துகிறது. மற்றும் பெரிய அளவு செய்திகளின் பயன்பாடுகளையும் உணர்த்துகிறது.
      பணம் தராமல் செய்யும் விளம்பரங்கள் (பொது விளம்பரங்கள் என்றும் அழைக்கப்படும்) குறைந்த செலவில் நல்ல வெளிப்பாடு அளிக்கிறது. தனிப்பட்ட சிபாரிசுகள் (“நண்பரைக் கொண்டு வாருங்கள்” “விற்பனை செய்யுங்கள்"),ஒலிபரப்பும், அல்லது ஒரு சாதாரணப்பெயருக்கு பதிலாக அந்தப் பொருளின் பெயர் சமமாக்கி பெருமை பெறுவது. அமேரிக்காவில் ஜெராக்ஸ்= போட்டோ காப்பியர், க்லேநெக்ஸ் = டிஸ்யூ, வாசலின்= பெட்ரோலியம் ஜெல்லி, ஹுவர்= வாக்கும் க்ளீனர், நின்டெண்டோ= வீடியோ கேம், மற்றும் பேண்ட் எய்ட்= ஓட்டும் கட்டு" எந்த விளம்பர பிரச்சாரமா இருந்தாலும் நாம் இது மாதிரி விஷயங்களைப் பார்க்கலாம் . எப்படியானாலும் சில நிறுவனங்கள் அவர்களுடைய தனிப்பட்ட பெயரை வேறு பொருளுக்கு உபயோகிப்பதை எதிர்க்கின்றன.ஒரு பொதுப்பெயருக்கு சமமாக தனிப்பெயர் உபயோகிக்கும்போது அந்த தனி சாதனம் பொதுவான டிரேட் மார்க் ஆக மாற்றக் கூடிய சிரமங்கள் ஏற்ப்படலாம். இதன் பொருள் , இதனுடைய சட்டப்பூர்வமான டிரேட் மார்க் பாதுகாப்பை இழக்க நேரிடும்.
      1998 இல் மொபைல் போன்புதிய மக்கள் ஊடகமாக ஆனபோது முதல் முதலில் கட்டணம் செலுத்தி எடுத்துக் கொள்ளும் விஷயங்கள் கைபேசியில் ஃபின்லாந்தில்தான் ஆரம்பமானது. ஆனால் இது ஒரு குறுகிய காலம் மட்டும் தான், பின்னால் கைபேசி விளம்பரம் வரும் வரைதான். இதை பின்லாந்து முதலில் ஆரம்பித்த ஆண்டு 2000 . 2007 இந்த ஆண்டு கைபேசி விளம்பரத்தின் மதிப்பு $2.2 பில்லியனை எட்டியது, மற்றும் கைபேசி விளம்பரங்கள் வழங்கும் அட்மாப் போன்றவை பில்லியன் கணக்கில் அளித்தன.
      மிக முன்னேற்ற மடைந்த மல்டீமீடியா மெசேஜிங் சர்வீஸ் பிக்சர் அண்டு வீடியோ மெசேஜஸ் தட்டி விளம்பரமும் அடங்கும், சீட்டுகள், பல ஊடக செய்தி சேவைகள்,மற்றும் பட செய்திகள், விளம்பரப்போட்டிகள்,மற்றும் பலதரப்பட்ட சந்தை பிரச்சாரங்கள். கைபேசி விளம்பரங்கள தூண்டும் குறிப்பிட்ட அம்சம். 2டி பார்கோடு, இது வலை முகவரியை தட்டச்சு செய்ய அவசியமில்லாது செய்தது மற்றும் நவீன கைபேசி காமிரா அம்சத்தை உபயோகித்து உடனடியாக வலை விஷயங்களை அடையும் வசதி லாபமாகிறது. 83 சதவிகித ஜப்பானிய கைபேசி உபயோகிப்போர் ஏற்கனவே 2D பார்கோட் உபயோகிப்பவர்களாக ஆகிவிட்டனர்.
      சமூக வலையமைப்பு விளம்பரம் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு வகை விளம்பரம் .இது ஒருவகை சமூக வலைப்பணித் தளங்களைக் குறிவைக்கும் ஆன்லைன் விளம்பரங்கள். இது ஏறத்தாழ ஒரு வளர்ச்சியடையாத ஒரு சந்தை, ஆனால் விளம்பரதாரர் சமூகப்பணி வலைத்தளங்களுக்கு உபயோகிப்போர் அளிக்கும் மக்கள் கருத்தை ப்பற்றிய தகவல்களை எளிதாக தங்களுக்கு ஏதுவாக்கிக் கொள்கிறார்கள். நட்பு விளம்பரம் எனபது ஒரு துல்லியமான விளம்பரம் , இதன் மூலம் நேரடியாக சமூக வலையமைப்புசேவையை உபயோகித்து மக்கள் விளம்பரங்களுக்கு வழிகாட்டி அடுத்தவர்களை அடையச்செய்கிறது.
      ஒரு வர்த்தக இடைவேளையின் போது ஒரு நிறுவனத்தின் சாதனம் மட்டும் முழுவதுமாக விளம்பரப்படுத்தப்படுகிறது அத்தகைய கன்டென்ட் ராப் என அழைக்கப்படும் சிறிய நிகழ்ச்சி இடைவேளைகள் கன்டென்ட் ராப்நடத்தப்படுகிறது. CW முன்னோடிகளால் கன்டென்ட் ராப் மூலம் விளம்பரமாகும் சில சாதனங்கள் - மூலிகை சாறுகள், கிரஸ்ட், கிடார் ஹீரோ, கவர் கேர்ள், மற்றும் சமீபத்தில் டோயோட்டா.
      சமீபத்தில் புதிய உயர்ந்த கருத்தான அர்வெர்டைசிங் தோன்றியுள்ளது. இது வளரும் நிதர்சனத் தொழில்நுட்பத்தின்ஆதரவுடன் இயங்குகிறது.

No comments:

Post a Comment