இந்தியத் தரைப்படை
இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லை கண்காணிப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, அமைதி நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின்போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப்பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர் மேலும், ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.[வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும்
இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை
படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை
படுத்தப்படவில்லை.இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது
இடத்தில் இருக்கிறது.
குறிக்கோள்கள்:
இந்திய
தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப்பிரிவுகளை போன்றே
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.
- முதன்மை குறிக்கோள் : நாட்டின் பாதுகாப்பு நலன், அரசுரிமையை பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பை பாதுகாத்தல், இந்தியாவை வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்.
- இதர குறிக்கோள்கள்: பிற மறைமுக போர்களில் அரசு முகமைகளுக்கு உதவுதல் மற்றும் பிற உள்நாட்டு அச்சுறுத்தல்களை களைதல், குடிமக்களுக்கு அவசர கால தேவையின் போது உதவியளித்தல்.
வரலாறு:
இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டு , ஆங்கிலேய-இந்திய தரைப்படை இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு அளிக்கப்பட்டது. பெரும்பான்மையான படைகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டன. இந்திய தரைப்படை ஆங்கிலேய-இந்திய தரைப்படையில் இருந்து உய்த்துணரப் பட்டதால், ஆங்கிலேய-இந்திய தரைப்படையின் அதே நிலைமுறை வடிவமும், சீருடைகளும், பழக்கவழக்கங்களும், ஆங்கிலேய மரபை ஒத்துள்ளது. நகைச்சுவையாக, இந்திய தரைப்படை இன்றைய ஆங்கிலேயருடைய படையினரை விட அதிகமாக ஆங்கிலேய மரபை பாதுக்காப்பதாக கூறுவர்.முதலாவது காசுமீர் போர் (1947)
விடுதலை அடைந்த உடனே இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையே காசுமீர் மாநில உரிமை மீதான சச்சரவின் மூலம் போர் மூண்டது. அந்நாளில் இசுலாமியர் பெரும்பான்மையான காசுமீர் மாநிலத்தை ஆண்ட இந்து அரசர் தன் மாநிலத்தை இந்தியாவுடனோ பாக்கித்தானுடனோ சேர்க்க இணக்கம் தெரிவிக்கவில்லை. இதன் காரணமாக, பாக்கித்தான் தன் படைகளை ஏவி காசுமீரத்தை கைப்பற்றி தன் நாட்டுடன் இணைக்க முயன்றது. காசுமீர் அரசர் அரிசிங் இந்தியாவின் படைத்துறை உதவியை நாடினார். இந்தியா முதலில் உதவ மறுத்தாலும், பின் காசுமீரை இந்தியாவுடன் இணைக்க ஒப்பந்தம் கையொப்பம் ஆனதும் தன் படைகளை அனுப்பியது. இவ்வொப்பந்தத்தை பாக்கித்தான் இன்றளவும் ஏற்க மறுக்கிறது. இப்போரில் இந்திய தரைப்படைகள் காசுமீரின் தலைநகரான சிரீநகர் பகுதியில் வான்படையால் இறக்கப்பட்டனர். இப்போரில் இந்திய தரைப்படை தலைவர் செனரல் திம்மையா மாறுவேடத்தில் நேரடியாக பங்கேற்றார். மாநிலம் முழுவதும் நடைபெற்ற போரில் பல முன்னாள் நண்பர்கள் ஒருவருக்கொருவர் எதிர்த்து போரிட்டனர். 1948ஆம் ஆண்டு இந்திய மற்றும் பாக்கித்தானிய போர் முடிவுக்கு வந்தது. இருதரப்பினரும் தாம் கைப்பற்றிய பகுதிகளை தமதாக்கிக் கொண்டு ஒரு தற்காலிக கட்டுப்பாட்டுக் கோட்டினை ஒப்புக்கொண்டு இயங்குகின்றனர்.இந்திய-சீன போர் (1962)
1959இல் இருந்தே , இந்தியா, தனது படைகளை இந்திய–சீன எல்லையில், சீனா தனது பகுதிகளாக கருதும் பகுதிகளில் முன்னேற்றியது. பல சிறிய எல்லை சண்டைகளை இந்தியா தொடங்கினாலும், சீனா எந்தவித பதில் நடவடிக்கையையும் எடுக்க வில்லை.[5] திபெத் பிரச்சனை தீவிரமடைந்த நிலையில் இரு நாடுகளுக்குமிடையே உரசல்கள் கூடின.[6]இந்திய படை ஐதராபாத், கோவா ஆகிய இடங்களில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, தனது படைவலுவைத் தவறாக கணக்கிட்டு மக்கள் சீனக் குடியரசுடனான எல்லை பிரச்சனையை போர் மூலம் முடிவுக்கு கொண்டுவர திட்டமிட்டது. 1962ஆம் ஆண்டு, இந்திய தரைப்படை பூடான், அருணாச்சல் பிரதேசம் எல்லை அருகே 5 கிலோமீட்டர் சீன எல்லைக்குள் முகாமிட்டது. சீனாவும் பல இந்திய பகுதிகளை ஆக்கிரமித்த்து குறிப்பிடத்தக்கது. மேலும் தாம் ஆக்கிரமித்த அகாசி சீன் பகுதிகளில் சீனா பல சாலைகளையும் உருவாக்கி இராணுவ நடவடிக்கைகளுக்கு வியூகம் அமைத்திருந்தது. பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், சீன தரைப்படை இந்திய தரைப்படையை அக்டோபர் 12ல், தக்களா மேடு என்ற பகுதியில் திடீரென தாக்கியது. திடீர் தாக்குதலில் இந்திய தரைப்படை நிலைகுலைந்தது. அகாசி சின் வரையிலான பகுதிகளை திரும்ப கைபற்றுமாறு அன்றைய தலைமை அமைச்சர் நேரு ஆணையிட்டார். எனினும், வெகுதாமதமாக வந்த ஆணையால் இந்திய தரைப்படையால் போதுமான படைகளை நகர்த்த முடியாமல் போனது. மேலும், சீன படையினரின் அதிகமான எண்ணிக்கையும், சீனா எல்லையின் பல இடங்களில் தாக்குதலை துவக்கியதும், இந்திய தரைப்படையை சீர்குலைத்தன. சீனா அகாசி சின் பகுதியை மட்டுமல்லாது அருணாச்சல் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளையும் கைப்பற்றினர். சீனா தாம் கோரிய பகுதியை கைப்பற்றியதுடன் மற்ற சில பகுதிகளையும் கைப்பற்றியபின் மக்கள் சீனக் குடியரசு இந்திய அரசை சமரசத்திற்கு அழைத்தது. ஆனால் இந்தியா சமரசத்தை வேண்டாது தொடர்ந்து போரில் ஈடுபட, சீனா தாமாகவே அருணாச்சல் பிரதேச மாநிலத்தை விட்டு பின்வாங்கியது. இந்திய பாதைகளின் மோசமான தோல்வி பல கேள்விகளை எழுப்பியது. கென்டர்சன் பூருக்ஸ் என்பவர் தலைமையில் தோல்வியின் காரணங்களை அறிய ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் முடிவின்படி இந்திய படைத்துறையின் தலைமையும் இந்திய அரசியல் தலைமையும் இத்தோல்விக்கு காரணம் என்று அறியப்பட்டது. மேலும் இந்திய தரைப்படை மிகக்குறைந்த அளவில் படையை பயன்படுத்தியதும், வான்படைகள் போதுமான அளவில் படைகளை நகர்த்த இயலாமையும் இந்திய படைத்துறையின் தவறுகளாக சுட்டப்பட்டன. அன்றைய பாதுகாப்புத் துறை அமைச்சர் கிருசுண மேனன் ஊடகங்களின் பெரும் கண்டனத்துக்கு ஆளானார்.கட்டளையகங்கள்
இந்திய தரைப்படை 6 கட்டளையகங்களின் கீழ் இயங்குகிறது. ஒவ்வொரு கட்டளையகமும் லெப்டினன்ட் செனரல் தரத்திலுள்ள கட்டளை அலுவலகரின் கீழ் இயங்குகிறது. எல்லா கட்டளையகங்கள் புது டெல்லியில் உள்ள தலைமையகத்தில் இணைக்கப்பட்டுள்ளன. பயிற்சி கட்டளையகம் சிம்லாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.கட்டளையகம் அமைவிடம் தெற்கு கட்டளையகம் புனே கிழக்கு கட்டளையகம் கொல்கத்தா மத்திய கட்டளையகம் லக்னோ மேற்கு கட்டளையகம் சண்டிமந்திர் ( சண்டிகர் ) வடக்கு கட்டளையகம் உதம்பூர் தென் மேற்கு கட்டளையகம் ஜெய்ப்பூர் படைபலம்
இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும்.
இந்திய தரைப்படை படைபலம் செயலார்ந்த தீவிரப்பணி 1,300,000 இருப்பு படை 1,200,000 எல்லையோர பாதுகாப்பு படை 200,000** முதன்மை கவச தாங்கி வாகனம் 4,500 பீரங்கி 12,800 எறி ஏவுகணை 100 (அக்னி-1,அக்னி ஏவுகணை-2) எறி ஏவுகணை >500 (பிருத்வி -1) வழிகாட்டு இறக்கை ஏவுகணை பிரமோஸ் வானூர்திகள் 10 உலங்கு வானூர்தி ஸ்கோடரன் படைகள் தரைலிருந்து வான் தாக்கும் ஏவுகணை கள் 90000 புள்ளி விபரங்கள்
- 4 RAPID படைகள்
- 18 காலாட்படை பிரிவுகள்
- 10 மலை பிரிவுகள்
- 3 கவச வாகன பிரிவுகள்
- 2 பீரங்கி பிரிவுகள்
- 13 விமான எதிர்ப்பு பிரிகேட் + 2 தரைலிருந்து வான் தாக்கும் ஏவுகணை படையினர்
- 5 தனி கவச வாகன பிரிகேட்
- 15 தனி பீரங்கி பிரிகேட்
- 7 தனி காலாட்படை பிரிகேட்
- 1 வான்குடை பிரிகேட்
- 4 பொறியாளர் பிரிகேட்
- 14 தரைப்படை உலங்கு வானூர்தி படைகள்
No comments:
Post a Comment